Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஜூலை 31 வரை…. இலவசமா செய்து தருகிறோம்…. மாருதி சுசுகி வெளியிட்ட அறிவிப்பு…!!

ஜூலை 31 வரை வாரண்டி நீட்டிக்கப் படுவதாகவும் இலவசமாக கார் சர்வீஸ் செய்து தரப்படும் என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு தங்கள் நிறுவனத்தில் வாங்கப்பட்ட வாகனங்களுக்கு வாரண்டி, கார் பராமரிப்பு சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி போன்றவற்றிற்கான கால அவகாசத்தை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது அந்த கால அவகாசத்தை நீட்டித்து ஜூலை 31-ஆம் தேதி வரை வாரண்டி நீட்டிக்கப்படுவதாகவும் இலவசமாக கார் சர்வீஸ் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே எம்ஜி மோட்டார், மகேந்திரா, ஸ்கோடா, டாடா போன்ற கார் நிறுவனங்களும் இதைப்போன்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |