Categories
தேசிய செய்திகள்

வெளியான விக்ரம் லேண்டர் போட்டோ உண்மையா..?? போலியா..?? குழப்பத்தில் நெட்டிசன்கள்..!!

நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் புகைப்படம் என்று சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் போலியானவை என தெரியவந்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றி வரும் சந்திராயன்-2 ஆர்பிட்டர் இருக்கும் இடத்தை கண்டறிந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் உடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Image result for fake vikram lander photo

இந்த நிலையில் விக்ரமின் புகைப்படத்தையும் வெளியிட்டு இருப்பதாக கூறி சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் அவை போலியான புகைப்படங்கள் என்று தெரிய வந்துள்ளது. தற்போது விக்ரம் எனப்படுவது நாசா அனுப்பிய மின்கலத்தின் புகைப்படங்கள் ஆகும் இந்த புகைப்படங்கள் நாசாவின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் இருந்து இடம்பெற்றுள்ளன.

Categories

Tech |