Categories
உலக செய்திகள்

திடீரென்று வெடித்த காரின் டயர்…. குடும்பத்தோடு ஆற்றில் மூழ்கிய சோகம்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற காரினுடைய டயர் வெடித்து சிதறியதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நரோவல் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கார் ஒன்றில் புறப்பட்டு சூரா பண்டி கிராமம் நோக்கி சென்றுள்ளார்கள். இதனையடுத்து இவர்கள் சென்று கொண்டிருந்த காரினுடைய டயர் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியுள்ளது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஆற்றில் பாய்ந்துள்ளது. இதற்கிடையே காரில் இருந்த 2 குழந்தைகள் தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் ஆற்றில் பாய்ந்த காரினுள் இருந்த மற்ற 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதற்கு காஷ்மீரினுடைய பிரதமர் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |