Categories
சினிமா தமிழ் சினிமா

‘சுப்ரமணியபுரம்’ வெளியாகி 13 வருஷம் ஆயிடுச்சு…‌‌ சசிகுமார் வெளியிட்ட கலக்கல் புகைப்படங்கள்…!!!

சசிகுமார் சுப்ரமணியபுரம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியம்’  திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சசிகுமார் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, சுவாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது .

இந்நிலையில் சுப்ரமணியம் படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து சசிகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்த படத்தை தயாரிக்க எனக்கு உதவிய அனைவருக்கும் மற்றும் அதை வெற்றிகரமாக உருவாக்கிய அனைவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார். மேலும் அவர் சுப்ரமணியபுரம் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில மேக்கிங் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

 

Categories

Tech |