Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பிரசாதங்கள் விலை உயர்வு…. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்களின் விலையை உயர்த்தியுள்ளது. முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட லட்டு 50 ரூபாய் ஆகவும், 100 ரூபாயாக இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது. நெய்வேத்திய பிரசாதங்கள் முன்பு பக்தர்களுக்கு விற்கப்படுவதில்லை. தற்போது நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால் பக்தர்களுக்கும் விற்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |