ரஜினியின் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயந்தாரா நடிக்கிறார். மேலும் சுனில் ஷெட்டி , நிவேதா தாமஸ் , யோகி பாபு , தம்பி ராமையா , ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு பேட்டை படத்தை தொடர்ந்து மீண்டும் அனிருத் இசையமைக்கிறார்.அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை கொண்ட படமாக உருவாகும் தர்பார் நடிகர் ரஜினியின் 167 வது படமாகும்.
இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நடிகர் ரஜினிகாந்த் 1980களில் வரும் போலீஸ் அதிகாரியாக போன்று நடித்துள்ளதாகவும் , போலீஸ் , சமூக சேவகர் என இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார் என்றும் சொல்லபடுகின்றது. இந்த படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகுமென்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.