Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுவர்களை …. ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை …. திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு ….!!!

பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் 11 பவுன் நகைகள் ,ரூபாய் 50 ஆயிரம் பணத்தை  கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் . இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும் மகன் ஜானகிராமன் , மகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று உள்ளனர். இதனால் வீட்டில் ஜானகிராமன் ,அவரது தங்கை பிரியதர்ஷினி மட்டும் தனியாக இருந்து உள்ளன. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் தனியாக இருந்த சிறுவர்களிடம் ரூ 50ஆயிரம் பணத்தை லட்சுமணன் வாங்கி வரச் சொன்னதாக கூறியுள்ளனர். மேலும் சிறுவர்களிடம் இருந்த செல்போனில் அவர்களது தந்தை பேசுவதுபோல ஒருவர் பேசியிருக்கிறார்.

இதனை நம்பிய சிறுவர்கள் பணத்தை எடுப்பதற்காக பீரோவை திறக்க முயன்றபோது  சிறுவர்களிடம் இருந்து சாவியை பறித்த மர்ம நபர்கள் பணம் ,செயின் ,மோதிரம் கம்மல் உட்பட 11 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம் சிறுவர்கள் நடந்தவற்றை கூறியுள்ளனர். இது குறித்து ஆரணி காவல்  நிலையத்தில் லட்சுமணன் புகார் அளித்தார் . இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் – இன்ஸ்பெக்டர்கள் லாரன்ஸ் மற்றும் ரமேஷ் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |