தேனி மாவட்டத்தில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை மடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள கருத்தமலைப்பட்டியில் தியாகராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருடைய 1½ வயது குழந்தை யோகேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் பெற்றோருடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் யோகேஸ்வரன் படிக்கட்டு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து கீழே விழுந்துள்ளார். அப்போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவரும் குழந்தை மீது விழுந்துள்ளது.
இதில் யோகேஸ்வரன் மயக்கமடைந்ததை பார்த்த பெற்றோர் பதறியடித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட பெற்றோர் அங்கேயே கதறி அழுதுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தேனி க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.