தற்போது இந்தியாவில் பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒரு முறை பணம் செலுத்தினால் இருமடங்காகும், உங்களது வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி அனுப்பி அதன்மூலம் பணத்தைத் திருடுவது, பொருள்களை பொருள் தருவதாக கூறி அதில் ஏமாற்றுவது, ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று கூறிவிட்டு, உங்கள் வங்கியில் உள்ள பணத்தை திருடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வங்கிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்து வருகின்றன.
அது போன்று தற்போது புதிதாக online business-ல் உங்கள் பணம் இருமடங்காகும் என்று சொல்லி வரும் அழைப்புகள் எதையும் ஏற்க வேண்டாம். மற்றும் அதன் மூலம் வரும் குறுஞ்செய்தி லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று பொதுநலன் நெல்லை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த லிங்கை கிளிக் செய்தால் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.