Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக… கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி… மா. சுப்பிரமணியன் திறந்து வைப்பு…!!!

இந்தியாவில் முதன்முறையாக கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி மையத்தை மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரமாக பரவி வந்த கொரோனா இரண்டாம் அலை, தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட பிறகு தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்தது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போடுவதற்கு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. மக்களும் முன்பைவிட ஆர்வமாக தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வருகின்றனர். தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது. இன்று இந்தியாவில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீவிரமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்றும் இன்னும் 6 லட்சத்திற்கு மேல் தடுப்பூசி கையிருப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |