முன் விரதத்தால் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புதுகுறிச்சி கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்ற கந்தன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகின்றது.
இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் ரவி, சுப்ரமணி ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.