புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பல மாநிலங்களில் படிப்படியாக தொற்று குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகள் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் தொற்று தீவிரமான தேவை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தான் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே அமல் படுத்தப் பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியின், மதகடிப்பட்டு கால்நடை வார சந்தை வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக வார சந்தை மூடப்பட்டிருந்த நிலையில் ஊரடங்கில் தளர்வாக மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.