Categories
உலக செய்திகள்

நிலச்சரிவில் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்த வீடுகள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

ஜப்பானில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள அடாமி என்ற பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் இன்று காலையில் சுமார் 10:30 மணிக்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் மலைப்பகுதியின்  குடியிருப்புகள் மொத்தமாக மண்ணுக்கடியில் புதைந்துவிட்டது. இந்நிலையில் அங்கு வாழ்ந்து வந்த 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது, 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பங்கள் அனைத்தும் சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே ராணுவத்தினர், மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |