கனடாவில் 2 குடும்பங்கள் வசித்து வந்த வீடொன்றில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் chestermere என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இருக்கும் வீடு ஒன்றில் 2 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உடல் கருகி பலியாகியுள்ளார்கள்.
மேலும் இந்த வீட்டில் இருந்த 4 குழந்தைகள் எப்படியோ தீ விபத்திலிருந்து உயிர் பிழைத்து தப்பியுள்ளார்கள். இதனையடுத்து குடியிருப்பு வீட்டில் எவ்வாறு தீ பிடித்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.