ஒருநாள் போட்டியில் அதிக தோல்விகளை பெற்ற அணி என்ற பெருமையை இலங்கை அணி பெறுகின்றது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை அணி பெற்றுள்ளது. இதுவரை 860 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 428 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தோல்விகளின் பட்டியலில் இலங்கை அணி முதல் இடத்தை பிடிக்கின்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இந்திய அணி 427 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மூன்றாவது பாகிஸ்தான் 414 போட்டிகளிலும், நான்காவது வெஸ்ட் இண்டியன்ஸ் 384 போட்டிகளிலும் தோல்வி அடைந்து உள்ளது.