அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பரிசு பொருட்களை வழங்கியுள்னர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளரிக்கரை மலைகிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்நிலையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் அங்கு இருந்து விலகி அரசு பள்ளியில் சேர்ந்து வருவதால் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் சார்பில் கவுரவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில், நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, மணலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் முருகன் ஆகியோரும் கலந்துகொண்டு புதிதாக சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசு பொருட்கள், கல்வி உபகரணங்கள், கல்வி தொலைக்காட்சி அட்டவணை, பாடப்புத்தகங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுத்துள்ளனர்.