Categories
மாநில செய்திகள்

“வெள்ளை மனதுடன் இருந்தால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள்” டிடிவி தினகரன் பதிலடி.!!

வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார்.

Image result for R. B. Udhayakumar

இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக அமைச்சர் ஆர் பி உதயகுமார், “வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என பதில் கூறினார். மேலும் உலக தமிழர்களின் மதிப்பை முதல்வர் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுக்க  முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
Image result for Udhayakumar, ttv dhinakaran

இந்நிலையில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது,  வெள்ளை மனதுடன் இருந்தால் முதலீடு குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெள்ளை மனதுடன் தான் வெள்ளை அறிக்கை கேட்கின்றன டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |