நடன இயக்குனர் ஜானி தனது பிறந்தநாளை பீஸ்ட் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமர் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.
Thank u so very much Thalapathy @actorvijay Sir, @Nelsondilpkumar Sir, #KalanithiMaran Sir @sunpictures & #Beast Team 😍
A lifetime memory indeed🙏🏼❤️ https://t.co/U5epAs2aJd— Jani Master (@AlwaysJani) July 2, 2021
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நடன இயக்குனர் ஜானி தனது பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார் . மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விஜய், நெல்சன் ஆகியோருடன் இணைந்து ஜானி மாஸ்டர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.