நாம் தூங்குவதற்கு ஏற்ற காலம் என்பது இரவு மட்டும் தான். பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறிய பிறகு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும். அதுதான் நாம் தூங்குவதற்கு ஏற்ற பொழுது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும் என்பது முந்தைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வந்த ஒரு பழக்கம். ஆனால் எப்படி தூங்க வேண்டும் என்பது குறித்து சித்தர்கள் கூறுகின்றனர். அதைப்பற்றி இதில் பார்ப்போம். கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும் மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது.
எதற்காக வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது என்று கூறுகிறார்கள் தெரியுமா? இதற்கு ஒரு அறிவியல் காரணமும் உண்டு. வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது பிராண சக்தியை இழக்க நேரும். அதாவது மூளை பாதிப்பு ஏற்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். அதேபோல் மல்லாந்து கால்களையும் கைகளையும் அகட்டி கொண்டு நாம் தூங்கக் கூடாது. இதனால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் குறட்டை ஏற்படும். குரட்டை ஏற்படும் போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். குப்புறப் படுத்து தூங்கக் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி தூங்கக் கூடாது.
ஒருக்களித்து படுத்து தூங்கக் கூடாது. நீங்கள் இடது பக்கமாக ஒருக்களித்து தூங்கினால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இது நமது சுவாசம் வெளியே செல்லும் போது நீண்ட ஆயுள் வளரும். இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் சுவாசம் வெளியே செல்லும் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்த ஏப்பம் வரும்.