Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா விலையை குறைக்கணும் …. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சிக்காரர்கள் ….!!!

பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே பெட்ரோல் டீசல் , விலை உயர்வைக் கண்டித்து கட்சிக்காரர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே நடந்த இந்த ஆர்பாட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கவும் ,ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக ரூபாய் 7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம்  நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர்  தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கியுள்ளார்.மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வட்ட செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் அன்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து  கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

Categories

Tech |