ஆக்சன் கிங் அர்ஜுன் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் கதாநாயகன், வில்லன், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். சொல்லப்போனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது சொந்த செலவில் கெருகம்பாக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றைக் கட்டியுள்ளார்.
இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்காக அவர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்துள்ளார். அதோடு அவர் தனது யூடியூப் சேனல் மூலம் அங்கு நடந்தவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். மேலும் அர்ஜுன் தனது குடும்பத்துடன் அக்கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.