நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை 4.2% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ள நிலையில் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட் செய்த ராகுல் காந்தி, ஜூலை வந்துவிட்டது ஆனால் இன்னும் தடுப்பூசி வரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் #WhereAreVaccines என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி தடுப்பூசி எங்கே என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.