தேனி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சக்கரம்பட்டியில் மாடசாமி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மாடசாமி சைக்கிளில் ஆண்டிப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது வைகை அணை சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மாடசாமி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாடசாமி பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மாடசாமி மருத்துவமனைக்கு சென்ற சில வினாடிகளிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.