சுவிட்சர்லாந்து, அமெரிக்க அரசிடமிருந்து F-35 வகை போர் விமானங்களை வாங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
சுவிட்சர்லாந்து அரசு கடந்த புதன்கிழமை அன்று தங்கள் ராணுவம் அடுத்த தலைமுறை போர் விமானம் என்று F-35 Lightning II-ஐ தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. Lockheed Martin என்ற அமெரிக்காவின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் F-35 Lightning II எனும் அதிநவீன பைட்டர் ஜெட்களை உருவாக்குகிறது.
சுவிட்சர்லாந்தின் பெடரல் கவுன்சில், 5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் கொடுத்து, F-35A வகை போர் விமானங்கள் 36 வாங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. மேலும் வரும் 2030 ஆம் வருடத்திற்குள் இந்த McDonnell Douglas F/A-18 வகை விமானங்களுக்கான சேவை முடிவடைந்துவிடும். எனவே புதுப்பித்தல் திட்டமானது “Air 2030” என அழைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் புதிய விமானங்களை வாங்குகிறார்கள். லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட காலத்திற்கு, மொத்தமாக 15.5 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் F-35A வகை விமானத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Raytheon நிறுவனத்திடம், Patriot ஏவுகணைகள் 5 வாங்குவதற்கு பெடரேல் கவுன்சில் ஒப்பந்தம் செய்திருக்கிறது.