Categories
உலக செய்திகள்

Good News: சுவிட்சர்லாந்துடன் 6 ஐரோப்பிய நாடுகளும் அனுமதி….!!!

இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின், சீரம் நிறுவனத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் போது, அதற்கு உரிய சான்றிதழ்கள் வைத்திருப்பது அவசியமாகும்.

இருப்பினும் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தெரிவித்திருந்தது. இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட அவர்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டுமென இந்திய அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து, ஸ்விட்சர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சுலோவீனியா, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை உள்ளே வருவதற்கு அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |