இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளை 12 வருடங்களாக பிரிந்து தவித்து வருகிறார்.
இந்தியாவை சேர்ந்த ரோஷினி என்ற பெண் தன் மகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க நினைத்துள்ளார். எனவே ஒன்றரை வயதே ஆன தன் குழந்தை ட்விஷாவை, அவரின் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு கணவருடன் பிரிட்டன் சென்றிருக்கிறார். பிரிட்டன் செல்வதில் சிறிதும் விருப்பம் இல்லாத ரோஷினி வேறுவழியின்றி கனத்த மனதுடன் மகளை விட்டு சென்றிருக்கிறார்.
விமானம் புறப்பட தொடங்கியவுடன் பிரிட்டன் செல்ல போகிறோம் என்ற கனவு மறைந்து குழந்தையைப் பிரிகிறோம் என்ற குற்ற உணர்வு அவரை வாட்ட தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல் பிரிட்டன் வாழ்க்கை அவர் எதிர்பார்த்தது போன்று அமையவில்லை. கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு திருமண பந்தம் முடிந்து போனது.
எனவே மகளை மட்டுமே எண்ணி ரோஷினி வாழ்ந்துள்ளார். அதன்பின்பு ரோஷினி, தன் மகளை பார்க்கும் போது அவருக்கு ஆறு வயது ஆகிவிட்டது. மீண்டும் கனடா நாட்டிற்கு செல்ல ரோஷினி முடிவெடுத்துள்ளார். எனவே மாணவர் விசா மூலம் கனடாவிற்கு சென்று அங்கேயே படித்து பணியில் சேர்ந்துள்ளார்.
அப்படி என்றாலும் மகளுடன் சேரவேண்டும் என்ற ஆசையிலேயே அவரின் வாழ்க்கை சென்றிருக்கிறது. எனினும் ரோஷினி விண்ணப்பித்த நிரந்தர வாழ்ந்த உரிமத்திற்கு பதில் வரவில்லை. தற்போது கொரோனா காரணமாக மேலும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே மகளைக் காணாமல் தவித்து வருகிறார் ரோஷினி. தற்போது அவரின் மகள் ட்விஷாவுக்கு வயது 12. எனினும் மகளுடன் இணைந்து வாழவேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறவில்லை. ட்விஷாவின் முகம் மற்றும் புன்னகையை மனதில் வைத்துக்கொண்டு மகளுடன் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார் ரோஷினி..