Categories
தேசிய செய்திகள்

Big News: ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.10 லட்சம் பணம்… முதல்வர் அதிரடி…!!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் 10 லட்சம் பணம் வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் உயர் கல்விக்காக 10 லட்சம் ரூபாய் வரை மென் கடனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து இந்த திட்டத்தை அதிகாரபூர்வமாக செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில் மாணவர் கிரெடிட் கார்டு திட்டம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது: “இளைஞர்கள் சுயசார்புடைவர்களாக முன்னேறுவது தான் மாணவர்கள் கிரெடிட் கார்டு திட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகைக்கு குறைந்த வட்டி வசூலிக்கப்படும் என்றும், 15 வருடம் வரை பணத்தை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |