ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது லாரி மோதி படுகாயமடைந்துள்ளார்.
இராமநாதபுரம் பரமக்குடி அடுத்துள்ள போகலூர் கிராமத்தின் கருணாநிதி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சத்திரக்குடி அருகே உள்ள யூனியன் அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கருணாநிதி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்டு அவர்களது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்த சத்திரக்குடி போலீசார் லாரி ஓட்டுனரான உமர் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.