Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : ரோஜர் பெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார் …!!!

 காயத்தால் மன்னாரினோ விலகியதால் ,ரோஜர் பெடரர் 2 வது சுற்றுக்கு முன்னேறி   உள்ளார். 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் 6ம் நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான  சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டு வீரரான அட்ரியன் மனாரினோவுடன்  மோதினர் . இதில் இருவரும் தலா 2  செட்டுகளை கைப்பற்றி  இருந்தனர். இதில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் வீரர் மனாரினோவுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் போட்டியிலிருந்து விலகினார்.

இதனால் ரோஜர் பெடரர்  முதல் சுற்றில் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து மற்றொரு போட்டிகளில்  2-ம் நிலையில் இருக்கும் ரஷ்யா வீரர்  மெட்வதேவ்,  தரவரிசையில் 4-வது இடத்தில்  உள்ள ஜெர்மனி வீரர் சுவரேவ் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி 2 வது சுற்றுக்கு முன்னேறினர் .

 

Categories

Tech |