Categories
உலக செய்திகள்

சர்வதேச சைபர் பாதுகாப்பு அட்டவணை.. 10 வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா..!!

சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீட்டு பட்டியலில் 10 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியிருக்கிறது.

சைபர் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை உண்டாக்க சர்வதேச அளவில் சைபர் பாதுகாப்பு அட்டவணையை ஐ.நா கடந்த 6 வருடங்களாக வெளியிட்டு வருக்கிறது. இதில் இந்தியா 47வது இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில், கடந்த 2020 ஆம் வருடத்திற்கான பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்திற்கு வந்துவிட்டது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலானது, “சர்வதேச அமைதி மற்றும் சைபர் பாதுகாப்பு” என்னும் தலைப்பில் ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் வெளியுறவுத்துறை செயலரான, ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா கூறுகையில், தீவிரவாத அமைப்பினர் பிரச்சாரத்திற்காகவும், வெறுப்புகளை பதிவிடவும் இணையதளங்களை அதிகமாக உபயோகிக்கிறார்கள்.

இவ்வாறான இணையவழி தாக்குதலிலிருந்து நம்மைக் காப்பதற்கு உறுப்பு நாடுகள் பல நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த பட்டியலில் 33 வது இடத்தை சீனாவும் 79 ஆவது இடத்தை பாகிஸ்தானும் பெற்றிருக்கிறது.

Categories

Tech |