பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர் மீது அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஐந்து பக்கத்திற்கு பாலியல் புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அந்த புகாரில் தமிழ் துறை தலைவரான பேராசிரியர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் தங்களுடன் மிக நெருக்கமாக அமர்ந்து கொள்கிறார் எனவும், வகுப்பு நேரத்தில் பக்கத்தில் அமர்ந்து சொல்லிக் கொடுப்பது போல் தங்களது கால்களை சுரண்டுவதும், இரட்டை அர்த்தத்தில் பேசுவதாக கூறி பல்வேறு பாலியல் சீண்டல்களை செய்ததாக அவர் மீது மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த செயல்களுக்கு அதே துறையில் பணியாற்றும் பெண் உதவி பேராசிரியரும் உறுதுணையாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் தாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேற விரும்புவதாக மாணவிகள் தங்களது மனுவில் கூறியிருந்தனர். மேலும் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையை எடுக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். தற்போது இவர் கல்லூரியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.