Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடைபெறும் போட்டி… 9 இந்திய வம்சாவளியினர் தேர்வு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் நடத்தப்படும் “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் இறுதி கட்ட சுற்றுக்கு இந்திய வம்சாவளியினர் 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கென நடத்தப்படும் “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் கடினமான ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிபவர்களுக்கு பரிசு தொகையும், சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட “ஸ்பெல்லிங் பீ” போட்டி கடந்த மாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. அதில் பல்வேறு கட்ட சுற்றுகளுக்கு பிறகு தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு இறுதிகட்ட சுற்று வருகின்ற 8-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் இறுதிகட்ட சுற்றில் 11 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர் அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே இருந்து வரும் நிலையில் கடந்த 20 வருடங்களாக இந்திய வம்சாவளியினரே “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். தற்போது வரை “ஸ்பெல்லிங் பீ” போட்டியில் சாம்பியன் பட்டத்தை 26 இந்திய வம்சாவளியினர் பெற்றுள்ளனர்.

Categories

Tech |