Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியீடு…. வெளியான அறிவிப்பு…!!!

இந்திய அணியின் போட்டி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக டி20 உலகக் கோப்பையை முதலில் இந்தியாவில் நடத்துவதற்கு ஐசிசி முடிவு செய்திருந்தது. அதன்படி, 7 -வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் , நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், இந்த உலகக் கோப்பை t20 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. டி20 உலகக்கோப்பை போட்டி வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என்று ஐசிசி  தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் போட்டி அட்டவணை தற்போது வெளிவந்துள்ளது

ஜூலை: இலங்கை அணியுடன் 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டி
ஆகஸ்ட்- செப்டம்பர்: இங்கிலாந்துடன் ஐந்து டெஸ்ட் போட்டி
செப்டம்பர்- அக்டோபர்: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள்
அக்டோபர்- நவம்பர்: ஐசிசி டி20 உலக கோப்பை தொடர்
நவம்பர்: நியூசிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டி
டிசம்பர்- ஜனவரி: என்னுடன் மூன்று டெஸ்ட் போட்டி, 3 டி20 போட்டி.

Categories

Tech |