Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில்… மர்ம நபர்களின் கைவரிசை… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

ஒரே நேரத்தில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் விலை மதிப்புடையை பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதனந்தபுரம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது அவரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த விலை மதிப்புடைய கேமரா, லேப்டாப் மற்றும் 23 பவுன் தங்க நகையும் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதைப்போல் இவரது வீட்டின் அருகில் அப்துல் ஜாஹித் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் தங்கநகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவர் வீட்டின் அருகில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். பின்னர் இவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இக்கொள்ளைகளை பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பின்னர் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |