கருங்கடலில் கூட்டு கடற்படை பயிற்சிகள் தொடங்கப்பட்டதையடுத்து ரஷ்யா மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, உக்ரைன் போன்ற 30 நாடுகள் ஒன்றாக சேர்ந்து கருங்கடலில் sea Breeze என்று அழைக்கப்படும் கூட்டுப் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ரஷ்யா நாட்டிலுள்ள மாஸ்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் தெர்மல் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சமீபத்தில் சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து ரஷ்யா இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அந்நாட்டிலிருக்கும் பிளெசெட்ஸ்க் காஸ்மோட்ரோம் என்னும் விண்வெளி மையத்திலிருந்து சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.