பஞ்சாபில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 10 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து கடந்த மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம், வருகின்ற ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்த போதிலும், டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 10 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை 1 முதல் மதுபானக் கூடங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, திரையரங்குகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.