குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பங்களா தோப்பு தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் மதுபோதையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.