Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் …. வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள் …. 8 கிலோ கஞ்சா பறிமுதல் …!!!

பேருந்தில் கஞ்சா  கடத்த முயன்ற வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்து   விசாரணை   நடத்தி வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆரம்பாக்கத்தில் இருந்து சென்னையை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்ததை நிறுத்தி  போலீசார் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மிதுன், சீபு நந்தா ஆகிய 2  வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை  பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |