பிரிட்டன் சுகாதார செயலாளர், 3 குழந்தைகளுக்கு தாயான தன் உதவியாளரை முத்தமிட்ட புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரிட்டன் சுகாதார செயலாளர் மாட் ஹான்காங்க், தன் உதவியாளர் Gina Coladangelo வை அலுவலகத்தில் வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைதொடர்ந்து அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரின் தொடர்பில் ரகசியமாக பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இவர்களின் முத்த விவகாரம் வெளிவருவதற்கு, பல மணி நேரங்களுக்கு முன்பாகவே மாட் ஹான்காக் தன் மனைவியிடம், நம் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். மேலும், அவரின் உதவியாளர் Gina Coladangelo கோடீஸ்வரி ஆவார். அவர் தன் கணவருடன் வசித்து வந்த வீட்டை விட்டு, தன் உடைமைகளுடன், 70 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புடைய ஆடி காரில் சென்றுவிட்டாராம்.
அதன் பின்பு அவர் வீட்டிற்கு செல்லவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு அவரின் கணவரை பிரிந்துவிட்டார். ஆனால் அவரின் கணவர் 12 வருட திருமண வாழ்வு திடீரென்று முறிந்து போனதை, தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்து வருவதாக அவரின் நண்பர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஹான்காங் மற்றும் Gina இருவரும் காதலித்து வருவதாகவும் ஒன்றாக வாழ்வதற்கு முடிவெடுத்திருப்பதாகவும் அவர்களின் நண்பர்கள் கூறியுள்ளார்கள்.