Categories
தேசிய செய்திகள்

அதிவேக சொகுசு கார் மோதி… “பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!

அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் பின்னால் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த நபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபராபாத்தில் நேற்று முன்தினம் அதிவேகமாக சென்ற சொகுசு கார் பின்னால் இருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சைபராபாத் போலீசார் இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனோர்பிட் மால் அருகே மழையில் நினைந்த சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் பின்னாலிருந்து இடித்து தள்ளியது.

அதிவேகமாக கார் இடித்ததால், ஆட்டோவை கட்டுப்படுத்த முடியாமல் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட சுழன்று விழுந்தது. அதில் பயணம் செய்த பயணி மற்றும் ஆட்டோ டிரைவர் காயம் அடைந்ததை அந்த வீடியோவில் காண முடிந்தது. மேலும் மது அருந்திவிட்டு வேகமாக காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதாக சொகுசு கார் டிரைவர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |