நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பசுபதி, காளி வெங்கட், ஜான் விஜய், சந்தோஷ் பிரதாப், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.