Categories
தேசிய செய்திகள்

3 குழந்தைகளைப் பெற்ற தாய்… 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு திருமணமான இளம்பெண் 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த 20 வயதான சோனால் பாட்டில் என்பவருக்கு சிறிய வயதிலேயே திருமணம் ஆனது. இவர்களுக்கு மூன்று குழந்தை உள்ளது. இவரது கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு அவரை அடித்து மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் திருமண வாழ்க்கை அவருக்கு மிகவும் மோசமானதாக மாறியது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் 17 வயது மகனுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த 17 வயது சிறுவனிடம் தனது மணவாழ்க்கை பற்றி அனைத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து தனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும், இதிலிருந்து எப்படியாவது வெளியில் வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பின்னர் காலப்போக்கில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட நட்பு கள்ளக்காதலாக மாறியது. ஒருகட்டத்தில் அந்த மாணவரும் சோனால் பட்டேலை காதலிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் ஒருநாள் அந்த மாணவனையும் இளம் பெண்ணையும் காணவில்லை என்ற தகவல் வந்தது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மாணவனை கடத்தியதாக சோனால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். ஆனால் அந்த மாணவருடன் சந்திராம்பூரில் அவர் வசித்து வருவது தெரியவந்தது. பின்னர் அதிரடியாக காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |