மது குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததினால் சொந்த வீட்டிற்கு தீ வைத்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி புதூர் கிராமத்தில் லாரி டிரைவரான தட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமகுமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவர் லாரி டிரைவராக இருப்பதினால் வெளிமாநிலங்களுக்கு வேலை விசயமாக செல்வது வழக்கமாகும். இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து பிரமகுமாரி தனது கணவர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த தஷிணாமூர்த்தி மதுபோதையில் தனது சொந்த வீட்டையே தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த துணிமணிகள், நகைகள், பணம், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, குழந்தைகளின் பள்ளி சான்றிதழ் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாயின. இவ்வாறு எரிந்து நாசமாகிய பொருட்களின் மதிப்பு 1½ லட்சம் ரூபாய் இருக்கலாம் என மனைவி பிரமகுமாரி தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சோலார் மின் தகடுகளை தஷ்ணாமூர்த்தி போதையில் கல்லால் எறிந்து உடைத்துள்ளார். இதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என கணக்கிடப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தக்ஷிணாமூர்த்தியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.