விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 4-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் .
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 4-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த சிட்சிபாஸ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவிடம் மோதினர் .இதில் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் வெற்றி பெற்று , சிட்சிபாஸ்க்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
இதையடுத்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் 10-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசை சேர்ந்த வீராங்கனை பெட்ரா கிவிடோவா ,அமெரிக்க வீராங்கனைஸ் லோன் ஸ்டீபன்சிடம் மோதி, 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் பெட்ரா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இதைதொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 4-ம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, ருமேனியா வீராங்கனை மோனிகா நிகுலெஸ்சை எதிர்கொண்டு ,6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.இதையடுத்து நடந்த மற்ற ஆட்டங்களில் கார்பின் முகுருஜா , மேடிசன் கீஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர் .