பொதுமக்களை கொன்று குவித்த 21 அல் ஷபாப் பயங்கர வாதிகளுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை துப்பாக்கி சூடும் ராணுவ வீரர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சோமாலியாவில் அல் ஷபாப் என்னும் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பையும், துப்பாக்கிச் சூட்டையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு பயங்கர தாக்குதல் நடத்திய அல் ஷபாப் பயங்கரவாதிகள் 21 பேரை ராணுவத்தினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்துள்ளார்கள்.
இதனையடுத்து ராணுவ நீதிமன்றம் 21 பேர் மீதான வழக்கை விசாரணை செய்து இவர்களுக்கு மரண தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 21 அல் ஷபாப் பயங்கரவாதிகளை வரிசையாக நிற்க வைத்து நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ராணுவத்திலிருக்கும் துப்பாக்கி சுடும் வீரர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.