பொதுவிநியோக திட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லைக்கு சரக்கு ரயிலில் 2,500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிடமிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு மூட்டைகளாக அனுப்பிவைக்கப்படும். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினர். இதனையடுத்து 1,250 டன் அரிசி நெல்லை மாவட்டத்திற்கும் , 1,250 டன் அரிசி தூத்துக்குடி மாவட்டத்திற்க்கும் பொது விநியோகத் திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.