Categories
உலக செய்திகள்

ஆளே அடையாளம் தெரியல …. என்ன இப்படி ஆயிட்டாரு …. கவலையில் வடகொரியா மக்கள் …!!!

வட கொரிய அதிபர் கிங் ஜாங் உன் உடல் எடையை குறைத்துள்ள விவகாரம் அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வட கொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவர் எங்கு இருக்கிறார் , எப்படி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் 6ஆம் தேதி நடந்த  பொது நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்றார்.அப்போது அங்கிருந்தவர்கள் அதிபரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அவர்  உடல் எடை குறைந்து  மிகவும் மெலிந்து காணப்பட்டார். இவரது உடல்நிலை குறைப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு முன் சுமார் 170 சென்டி மீட்டர் உயரமும் 140 கிலோ எடையும் கொண்டிருந்த அதிபர் தற்போது 10 முதல் 20 கிலோ குறைத்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய எடை இழப்பு வடகொரிய நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இதுகுறித்து பியோங்யாங் நகரவாசி ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு  அளித்த பேட்டியில் கூறும்போது, “அதிபரின் எடை இழப்பு குறித்து வட கொரிய மக்கள் அனைவரும் மனமுடைந்துள்ளதாகவும் , இது தங்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது” என்று அவர்  கூறினார் .மேலும் இதுகுறித்து சியோலின் கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின் கூறும்போது ,”அதிபரின்  இந்த எடை இழப்பு நோயின் அறிகுறியாக இல்லை இவருடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு முயற்சியாகும்.

ஒருவேளை அவர் உடல்நல குறைவுடன் இருந்திருந்தால் தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவின்  கூட்டத்தை திரட்ட அதிபர் பொது இடத்திற்கு வந்திருக்க மாட்டார் ” என அவர் கூறினார். மேலும் அதிக குடிப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்திற்கு பெயர் போன அதிபர் கிம் , இதய பிரச்சினைகள் கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர் ஆவார். அவருக்கு முன்பாக  வட கொரியாவை ஆண்டு வந்த அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் இருதய பிரச்சனையால்  இறந்தனர். இவரது எடை இருதய நோய்க்கான சாத்தியத்தை அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |