Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக இடைவெளி இன்றி…. பிரியாணி கடையில் குவிந்த மக்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலப்பாடியில் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் சலுகை விலையில் மட்டன், சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதனால் பெரும்பாலானோர் கடையின் முன்பு குவிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கொரோனா தொற்று பரவும் வகையில் அருகருகே நின்றுகொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் ரமேஷ் தலைமையில், வருவாய்த் துறை ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் பிரியாணி வாங்க நின்று கொண்டிருப்பதை அதிகாரிகள் பார்த்தனர். இதனையடுத்து கடை உரிமையாளர் சமூக இடைவெளியை கடைபிடித்து பிரியாணி விற்பனை செய்யாததால் உடனடியாக வியாபாரம் நிறுத்தப்பட்டு கடையின் ஷட்டரை அடைத்து வருவாய்த்துறை ஊழியர்கள் சீல் வைத்தனர்.

Categories

Tech |