Categories
உலக செய்திகள்

என்ன…! ஆன்லைன் மூலம் திருமணமா…? கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. மணமக்களை வாழ்த்திய பெற்றோர்கள்….!!

காதல் ஜோடிகளின் திருமணம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தள்ளிக் கொண்டே போனதால் அவர்களுடைய பெற்றோர்கள் ஆன்லைனிலேயே தம்பதியருக்கு திருமணத்தை நடத்தி வைத்து தங்களுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

இந்தியாவில் Dombivil என்னுமிடத்தில் Bhushan என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய உயர்கல்விக்காக கன்னட நாட்டிற்கு சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இதனையடுத்து இவர் கன்னட நாட்டில் mandeep என்னும் பெண்ணை சந்தித்து காதலித்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து தங்களுடைய பெற்றோரிடமும் கூறியுள்ளார்கள். இதற்கிடையே கொரோனா தொற்று குறித்த கட்டுப்பாடுகள் அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் Bhushan னின் காதல் திருமணமும் தள்ளிக் கொண்டே சென்றுள்ளது.

இந்நிலையில் பெற்றோர்கள் இருவருக்கும் ஆன்லைனிலேயே திருமணம் செய்து வைப்பதற்கு முடிவை எடுத்துள்ளார்கள். அதன் பின் இருவரும் கன்னட நாட்டில் இருந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து ஆன்லைன் மூலம் தங்களுடைய ஆசிகளை மணமக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

Categories

Tech |