இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று தனி விமானம் மூலமாக இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால், இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்த இலங்கைத் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவரும் மும்பையில் 14 தனிமைப்படுத்தப்பட்ட பிறகு நேற்று தனி விமானம் மூலமாக இலங்கையில் உள்ள கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு சென்றதும் வீரர்கள் ஹோட்டலில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதையடுத்து வருகிற 2 -ம் தேதி முதல் இந்திய அணி வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
All SET! 💙
Sri Lanka bound 🇱🇰✈️#TeamIndia 🇮🇳 #SLvIND pic.twitter.com/eOMmiuxi28
— BCCI (@BCCI) June 28, 2021